3 முறை திருமணம் தள்ளி போன ஜோடிக்கு 4வது முறையாக நடந்த வித்தியாசமான திருமணம்

திருமணம் ஒவ்வொரு மனிதனும் மறக்க முடியாத ஒருநாள். அந்த நாளுக்காக அவன் காத்திருந்திருந்து தன் வாழ்க்கை அந்த தருணத்திலிருந்து மாறப்போகிறது என உணர்ந்து ஒரு மனிதன் அதைச் செய்கிறார். இந்த திருமணம் நாள் என்பது பல செண்டிமெண்டகளை உள்ளடக்கியது. ஆனால் இங்கு ஒருவருக்கு 3 முறை இந்த திருமண தேதி மாறி 4வது முறையும் மாறவிருந்த நிலையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நிகழ்த்தி திருமணம் செய்துள்ளார்.


அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஆலியா - மைக்கேல் தாம்சன் என்ற இருவர் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினரிடம் பேசி தங்களின் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இருவீட்டாரும் திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட நிலையில் திருமண தேதி முடிவு செய்யப்பட்டது.

ஆனால் தொடர்ந்து மூன்று முறை அவர்கள் நிச்சயித்த திருமண தேதியில் திருமணத்தை நடத்த முடியாமல் போனது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்கள் வந்து இவர்களது திருமணம் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இந்நிலையில் 4வதுமுறையாக அவரது திருமணம் நிச்சயிக்கப்பட்டது.