இரவில் பேயாக மாறியதா குழந்தை? வைரலாகும் புகைப்படம்

வெளிநாடுகளில் உள்ள பெற்றோர்கள் தற்போது குழந்தைகளைப் பராமரிப்பது தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகின்றனர். குழந்தைகள் இருக்கும் இடங்களில் கேமராக்களை பொருத்தி அதன் மூலம் குழந்தைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருகின்றனர்.


இந்நிலையில் ட்வீட்டரில் ஒருவர் செய்த பதிவில் கூறியிருப்பதாவது தனது குழந்தையைக் கண்காணிக்கும் வகையில் குழந்தை தூங்கும் பகுதியில் கேமரா ஒன்றைப் பொறுத்திருந்தார். அதில் அவர் இரவில் தூங்காமல் குழந்தை விழித்த போது கண்கள் பார்க்க வெள்ளையாகவும், அதே நேரத்தில் மூக்கு பகுதி கருப்பாகவும் இருந்துள்ளது.

இதை பார்த்த அவர் முதலில் பயந்துள்ளார். பின்னர் இது இரவில் வெளிச்சம் இல்லாததால் கேமராவில் உள்ள பிரச்சினை என்பதை உணர்ந்தார். ஆனால் கேமராவில் பதிவான காட்சி படி அந்த குழந்தை பார்க்கப் பேய் குழந்தை போலவே இருந்தது.