சீருடை இல்லாத விமானி விமானத்தை ஓட்டுவது மிக அபூர்வமானது என மூத்த விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் புனேயிலிருந்து டெல்லிக்கு இண்டிகோ நிறுவனத்தின் 6E-6571 ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் டெல்லியில் தரையிறங்கும் நேரத்தில் டெல்லியில் புகைமூட்டம் அதிகமாக இருக்கும் என விமான அதிகாரிகள் கணித்துள்ளார்.
ஆனால், அந்த விமானத்தின் விமானியாக இருப்பவர் 6E-6571 ரக விமானத்தை ஓட்டுவதில் மட்டுமே திறமை உள்ளவர். காற்று மாசுபாடு உள்ள இடங்களில் ஜாக்கிரதையாக விமானத்தைத் தரையிறக்க CAT III B என்ற பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்நிலையில், அந்த விமானத்தின் பயணிகளில் ஒருவர் CAT III B பயற்சி பெற்ற விமானி என்பது தெரியவந்துள்ளது. உடனே அவரை அணுகி விமானத்தை ஓட்டுமாறு மற்ற விமான அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
அந்த விமானி வெள்ளிக்கிழமை டெல்லியிலிருந்து புனே சென்ற விமானத்தில் கேப்டனாக இருந்தவர். அந்த விமானத்தை புனேயில் தரையிறக்கியதும், டெல்லிக்கு பயணிகளில் ஒருவராகத் திரும்ப இருந்தார். ஆனால், அவசர நிலை கருதி விமானத்தை இயக்க ஒப்புதல் கூறியிருக்கிறார்.