இதனால் வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நேற்றைய தினம் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டன. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அந்தவகையில் 29 ஆயிரத்து 213 பேருந்துகள் மாநிலம் முழுக்க இயக்கப்படவிருக்கின்றன. சென்னையிலிருந்து மட்டும் சுமார் 4950 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தற்போது சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 10ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில் (82601), மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடைய உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து திருச்சி