பொங்கல் விடுமுறை: இத்தனை சிறப்பு ரயில் இருக்கு.. உடனே புக் பண்ணுங்க

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு படையெடுப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதிலும் மற்ற பண்டிகைகளைவிட பொங்கல் பண்டிகையை மத வேறுபாடு கடந்து அனைத்து தரப்பினரும் தமிழர் திருநாளாக கொண்டாடுகின்றனர். மேலும் தொடர் விடுமுறைகள் அதிகமுள்ள பண்டிகையாகவும் பொங்கல் பண்டிகை உள்ளது.