கர்நாடக இசை: 'பசுவின் தோலால் மிருதங்கம் செய்யப்படுவது வாசிப்பவர்களுக்கு தெரியும்' - டி.எம். கிருஷ்ணா

இந்தப் புத்தகம், அதை எழுதுவதற்கான நோக்கம், மிருதங்கம் செய்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் இடையிலான சிக்கலான உறவு, கர்நாடக இசை உலகில் நிலவும் ஜாதிப் பாகுபாடு ஆகியவை குறித்தெல்லாம் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் டி.எம். கிருஷ்ணா. பேட்டியிலிருந்து:



ப. இதற்கு முன்பாக, Southern Music: Karnatic Story என்று ஒரு புத்தகத்தை எழுதினேன். 2013ல் வெளியானது. கர்நாடக இசையின் வரலாறு, சமூகவியல் பற்றிப் பேசும் புத்தகம் அது. அதில் ஜாதி என ஓர் அத்தியாயம் இருந்தது. பெரிய விவாவதத்திற்குள்ளான அத்தியாயம் அது. அப்போதுதான் நான் கவனித்தேன், அந்தப் புத்தகத்தில் இசைக் கருவிகளைச் செய்பவர்களைப் பற்றி நான் ஒன்றுமே எழுதவில்லை.


ஆகவே என்னுடைய கண்ணோட்டத்திலும்கூட, கர்நாடக இசை உலகம் என்றால் அதைப் பாடுபவர்கள், வாசிப்பவர்கள் மட்டும்தான் இருந்திருக்கிறார்கள்.